இந்தியாவை பாதுகாத்தல் சாஜக் இந்தியா - சத்தாரக் இந்தியா என்று அழைக்கப்படுகிறது.
எல்லை தாண்டியத் துல்லியத் தாக்குதல்
* இந்திய எல்லைகளை பாதுகாப்பதற் காகவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும், இந்திய ராணுவம் 2016 செப்டம்பர் 29-ஆம் தேதி பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரில் துல்லியத் தாக்குதல் களை நடத்தியது.
* துல்லியத் தாக்குதல்கள் பயங்கரவாதத்தை சிறிதளவும் சகித்துக்கொள்ள முடியாது என்பதை எதிரொலிக்கிறது
* 2016 செப்டம்பர் 18-ஆம் தேதி பயங்கரவாதிகள் யூரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்தி நமது வீரர்களை கொன்றனர்.
* இந்திய ராணுவம் எதிர்தரப்பில் பயங்கரவாதிகள் ஏவுதளங்களின் மீது அவர்களது ஊடுருவலை முன்கூட்டியே தடுக்கும் வகையில் துல்லியத் தாக்குதல் களை நடத்தியது.
* பயங்கரவாதிகளிடையேயும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவோரிடையேயும் குறிப்பிடத்தக்க ஆள்சேதத்தை ஏற்படுத்தியது.
* பயங்கரவாதிகளின் அடிப்படை வசதிகள், வடிவமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றை இந்திய ராணுவம் தகர்த்தது.v ய் சர்வதேச சமுதாயம் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.
* மேலும் சிறந்த பாதுகாப்புக்கு ரஃபேல் ஒப்பந்தம்
* 36 ரஃபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தம் 2016 செப்டம்பர் 23 அன்று கையெழுத்தானது.
* போர் விமானங்கள் வழங்குவது 2019 செப்டம்பரில் தொடங்கி 2022 ஏப்ரலில் நிறைவுபெறும்.
* ரஃபேல் போர் விமானம் பலவித போர் பங்கு பணிகளை ஆற்றவல்லது, நீண்ட தொலைவு இலக்குகளை தாக்கும் திறன்கொண்டது, நமது எதிரிகளைவிட, கூடுதலான அமைப்பு முறை திறன்கள் மற்றும் ஆயுத வலு ஆகியவற்றை தரும்.
அக்னி ஏவுகணை
* நீண்ட தொலைவு தரையில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தை தாக்கவல்ல இந்த பேலிஸ்டிக் ஏவுகணை 2018 ஜனவரி 18-ஆம் தேதி முழு அளவு தூரத்திற்கு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
* இந்த சோதனை இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு திறன்களையும், எதிரித் தாக்குதல் தடுப்புத் திறன்களையும் வெகுவாக உயர்த்தியது.
* இந்தியாவின் குண்டுத் தாக்குதல் திறன் மேம்படுத்தப்பட்டது
* ஐ.என்.எஸ். கல்வாரி - பிரதமர் ஐ.என். எஸ். கல்வாரி என்ற கடற்படை நீர்மூழ்கி கப்பலை 2017 டிசம்பர் 14-ஆம் தேதி அர்ப்பணித்து வைத்தார்.
* பிரமோஸ், உலகின் அதிவிரைவான ஒலியைவிட வேகமாக செல்லும் ஏவுகணை 2017 நவம்பரில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டபோது வரலாறு படைத்தது. இந்திய விமானப்படையின் முன்னணி போர் விமானமான சுகோய் 30 எம்கே ஒ போர் விமானத்திலிருந்து முதல்முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
* ஆகாஷ் பூமியில் ஓரிடத்திலிருந்து வானில் உள்ள ஒரு இலக்கை தாக்கவல்ல இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
* நிர்பய் என்ற இந்தியாவின் முதலாவது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட நீண்ட தொலைவு ஒலியைவிட குறைந்தவேகத்தில் செல்லும் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை பல்வேறு மேடைகளில் அமைத்து இயக்கக்கூடியது.
* பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் பேலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு 2017 டிசம்பர் 28-ஆம் தேதி ஒடிசாவில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்ட எதிர்நோக்கி வந்த ஏவுகணையை நேரடியாக மோதி எதிர்கொண்டது.
* உயிர்தியாகம் செய்த வீரர்கள் மற்றும் சீருடைப் பணியாளர்களின் நினைவாக ஆயுதப்படைகள் கொடி தின கொண்டாட்டத்தின் சிறப்பு இயக்கம் நடத்தப்பட்டது.
* இந்திய கடற்படையின் பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ்.வி. தாரிணி மூலம் அனைத்து மகளிர் மாலுமிகள் குழு உலகை சுற்றி வந்த முதலாவது பயணம் வெற்றிகரமாக நடைபெற்றது. தாரிணி கப்பல் 2017 செப்டம்பர் 10-ஆம் தேதி கொடியசைத்து அனுப்பப்பட்டது. மகளிர் ஆற்றல் முழுத் திறனை அடையவேண்டும் என்பதற்கான தேசியக் கொள்கைக்கு ஏற்ப இந்த கடல்பயணம் ""நாவிகா சாகர் பரிகிரமா"" எனப் பெயரிடப்பட்டிருந்தது.
* இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான முதலாவது முப்படைகளின் இந்திரா என்ற கூட்டுப் பயிற்சி ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டக் என்ற இடத்தில் 2017 அக்டோபரில் நடத்தப்பட்டது.
யுத் அப்யாஸ்-2017 பயிற்சி
* இந்தியா - அமெரிக்கா இடையிலான இரண்டு வார கூட்டு ராணுவப் பயிற்சி 2017 செப்டம்பர் 16-ஆம் தேதி வாஷிங்டன் டீசியில் உள்ள ஜாய்ன்ட் பேஸ் லூயிஸ் இணையதளத்தில் நடைபெற்றது.
எல்லை பாதுகாப்பு
* எல்லை கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை விரைவாக உருவாக்கியதன் மூலம் எல்லைப் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
* 2014 - 2018-இல் எல்லை கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.6209 கோடி அனுமதிக்கப்பட்டது.
* எல்லைப் பகுதியில் 246 கிலோமீட்டர் வேலி அமைப்பு
* எல்லைச் சாலைகள் 566 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டது.
* 785 கிலோமீட்டர் தூரத்திற்கு பேரொளி விளக்குகள் அமைப்பு
எதிரிச் சொத்துச் சட்டம்
* 1968 எதிரிச் சொத்துச் சட்டம் திருத்தி யமைக்கப்பட்டு, எதிரிச் சொத்து திருத்த மற்றும் மதிப்பீடு சட்டம் 2017 என 14.03.2017அன்று இயற்றப்பட்டது.
* எதிரியின் பிடியிலும், எதிரியின் கட்டுப்பாட்டிலும், எதிரி நிறுவனங்களிலும் இருந்த ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் வெற்றிகரமாக கொண்டுவரப்பட்டது மத்திய அரசின் மிக முக்கிய சாதனையாகும்.
* இந்த சட்டத்தின் காரணமாக மத்திய அரசுக்கு எதிரிச் சொத்துக்களின் மீது உரிமை உண்டாக்கப்பட்டது. இச்சட்டத்தினால், வாரிசு உரிமை தவிர்க்கப்பட்டது.
ஒரு பதவி நிலை ஒரு ஓய்வூதியம்
* 30.09.2017 நிலவரப்படி மற்றும் 31.12.2017-இல் தொகுத்தபடி, ஒரு பதவி நிலை ஒரு ஓய்வூதிய அமலாக்க பயன்கள் பற்றிய நிலவர அறிக்கை
* பாதுகாப்பு கணக்கு தலைமைக் கட்டுப்பாட்டு அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின்படி, ரூ.4172.64 கோடி, ரூ.2397.22 கோடி, ரூ.2322.68 கோடி, ரூ.1895.69 கோடி தொகைகள் முறையே முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது தவணை ஒரு பதவி நிலை ஒரு ஓய்வூதியம் நிலுவைத் தொகைகளாக வழங்கப்பட்டன.
* இந்த நான்கு தவணைகளின் மூலம் முறையே 20,43,354 முன்னாள் படை வீர்ர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள், 15,94,311 முன்னாள் படை வீரர்கள், 15,76,254 முன்னாள் படை வீரர்கள், 13,50,319 முன்னாள் படை வீரர்கள் பயனடைந்தனர்.
* இதுவரை மொத்தம் வழங்கப்பட்ட நிலுவைத் தொகை ரூ.10,788.23 கோடி.
* சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வணக்கம்.
* ""சுதந்திர சேனை சன்மானம்"" என்ற விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் ஓய்வூதியம் 15.08.2016 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் ஓய்வூதியதாரர்களைபோல, அகவிலைப்படி நிவாரணம் பெறுகிறார்கள். தொழிலியல் பணியாளர்களுக்கு அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையில் தற்போது அகவிலைப்படி வழங்கும் முறைபோல இவர்களுக்கும் வழங்கப்படும்.
தீவு மேம்பாடு
* நாட்டின் கடற்கரையோரமுள்ள 1382 தீவுகள் முழுமையான மேம்பாட்டுக்கென அடையாளம் காணப்பட்டுள்ளன. முதல் கட்டத்தில் அந்தமான் நிக்கோபாரில் 16, லட்சத்தீவில் 10 என 26 தீவுகள் மேம்பாட்டுக்கென எடுத்துக்கொள்ளப்படும். தீவுகள் மேம்பாட்டு முகமை இந்த பணிகளை மேற்கொள்ளும்.
* இடதுசாரி தீவிரவாதம் பாதித்துள்ள பூகோள பகுதி குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
* முக்கிய சாதனைகள் (பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள்)
* வன்முறைகள் குறைந்து வருதல் (2010 முதல் 2013 வரையும் மற்றும் 2014 முதல் 2017 வரையும் இடதுசாரி தீவிரவாதம் நிலவர ஒப்பீடு)
* வன்முறை சம்பவங்கள் 36.6 சதவீதம் குறைந்து, 6524-லிருந்து 4136-ஆக குறைந்தது.
* இடதுசாரி தீவிரவாதிகளில் சரணடைந்தோர் எண்ணிக்கை 143 சதவீதம் உயர்ந்து 1387-லிருந்து 3373ஆக உயர்ந்தது.
* பூகோள பரப்பு குறைந்து வருதல்
* வன்முறைகள் நடந்ததாக பதிவான மாவட்ட சம்பவங்கள் 76லிருந்து (2013) 58 ஆக (2017) குறைந்தது.
* வன்முறைகள் நடந்ததாக தகவல் பதிவான காவல் நிலையங்களின் எண்ணிக்கை 328 லிருந்து(2013) 291 ஆக(2017) குறைந்தது.
* மத்திய ரிசர்வ் காவல்படையின் பஸ்ட்டாரியா பிரிவு அமைக்கப்படுதல்:
* பாதுகாப்புகளில் உள்ளூர் பிரதிநிதித் துவத்தை அதிகரிப்பதற்காகவும், உள்ளுர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காகவும் பஸ்ட்டாரியா பிரிவு அமைக்கப்பட்டது. இடதுசாரி தீவிரவாதம் அதிகம் பாதித்துள்ள சத்திஷ்கர், பிஜப்பூர், தண்டேவாடா, நாராயண்பூர், சுக்மா மாவட்டங்களை சேர்ந்த 743 பழங்குடியினர் இதில் நியமிக்கப்பட்டனர். இதில் 242 பேர் பெண்கள். ஆள்சேர்ப்புக்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவு செய்யப்பட்டு இவர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு தொடர்பான செலவினத் திட்டத்தின்கீழ் நிதியுதவிvய் இந்த திட்டத்தின்கீழ் 106 இடதுசாரி தீவிரவாதம் பாதித்த மாவட்டங்களில் பாதுகாப்பு படையினரின் செயல்முறை தேவைகளுக்காக உதவி வழங்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் (2014-15, 2015-16, 2016-17, 2017-18) ரூ.1120573 கோடி விநியோகிக்கப்பட்டது. இந்த தொகை அதற்கு முந்தைய நான்கு நிதியாண்டுகளில் (2010-11, 2011-12, 2012-13, 2013-14) ரூ.875 கோடியாக இருந்தது.
கோட்டையாக்கப்பட்ட காவல்நிலை யங்கள் திட்டம்
* இந்த திட்டத்திற்கு 2010-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. திட்டமிடப்பட்ட 400 காவல்நிலையங் களில் 386-இல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 320 காவல் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.
காணாமல்போன குழந்தைகளை மீட்டல்:
* மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளின் உதவியுடன் 2015 ஜூலை மாதம் மஸ்கான் திட்டத்தை நடத்தியது. 2016 ஜனவரியில் ஸ்மைல் திட்டம் நடத்தப்பட்டது.
மொபைல் தொலைபேசி செயலி ""ஹிம்மத்"":
* தில்லி காவல் துறையினால் 2015 ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த செயலி பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்தவும், இன்னலில் சிக்கியுள்ள பெண்களுக்கு உதவவும், அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்யவும் உதவுகிறது. பெண்கள் அவசர காலங்களின்போது, அவசர உதவி தேவை என்ற செய்தியை அனுப்ப இந்த செயலி உதவுகிறது.
இதனால், காவல்துறை கட்டுப்பாட்டுத் துறை அறையில் உடனுக்குடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்போதைய இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் பதிவாகின்றன. இதனையடுத்து இந்த இடத்திற்கு அருகில் உள்ள காவல்துறை ரோந்து வாகனம் மற்றும் அப்பகுதி காவல் நிலையத்தினர் விரைந்து சென்று உதவ வாய்ப்பு ஏற்படுகிறது.